/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லுாப் சாலையில் கருவாடுகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம்
/
லுாப் சாலையில் கருவாடுகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம்
லுாப் சாலையில் கருவாடுகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம்
லுாப் சாலையில் கருவாடுகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம்
ADDED : டிச 05, 2024 12:17 AM

சென்னை,
மெரினா லுாப் சாலையில், 14.93 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில், குலுக்கல் முறையில் மீன் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், பின் வரிசையில் கடைகள் ஒதுக்கப்பட்ட வியாபாரிகள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் அத்துமீறி மீண்டும் சாலையோரத்திலும், வாகனம் நிறுத்துமிடத்திலும் வியாபாரம் செய்தனர். இதைக் கண்டித்து, முன்வரிசையில் கடைகள் ஒதுக்கப்பட்ட வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு லுாப் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்று காலை 50 பெண்கள் உட்பட 70 பேர், லுாப் சாலையில் கருவாடுகளை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, லுாப் சாலையிலேயே வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என, வியாபாரிகள் வலியுறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.