ADDED : நவ 29, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: நள்ளிரவில் மரம் முறிந்து விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, திலகர் நகர் முதல் தெருவில், நேற்று (நவ.,28) நள்ளிரவு, ராட்சத துாங்குமூஞ்சி மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேறி முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு படை வீரர்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் ராட்சத மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின், போக்குவரத்து சீரானது.
