தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் போக்குவரத்து மாற்றம்


ADDED : பிப் 15, 2025 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும், 'டிரையத்லான்' போட்டி, நாளை காலை 4:30 மணி முதல் 10:30 மணி வரை நடக்க உள்ளது. அதற்கான பயிற்சி, அதே நேரத்தில் இன்று நடக்கிறது. இதற்காக மெரினாவில், இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.

l பாரிமுனையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் போர் நினைவிடம் நோக்கி அனுமதிக்கப்படாது. ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் வடக்கு கோட்டை சாலை - முத்துசாமி பாலம் - அண்ணாசாலை நோக்கி திருப்பி விடப்படும்

l காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்களும் நேப்பியர் பாலம் நோக்கி அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே வாலாஜா சாலை - அண்ணாசாலை நோக்கி திருப்பி விடப்படும்.

வாலாஜா சாலை வழியாக வரும் வாகனங்கள், கண்ணகி சிலையை நோக்கி திருப்பிவிடப்படாது. உழைப்பாளர் சிலையில் இருந்து எம்.டி.சி., பஸ்கள் அண்ணாசதுக்கம் பேருந்து நிலையம் செல்ல மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படும்

l சுவாமி சிவானந்தா சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், பெரியார் சிலை அருகே அண்ணாசாலை - வாலாஜா முனை, அண்ணாசாலை நோக்கி திருப்பிவிடப்படும்

l முத்துசாமி பால முனையிலிருந்து கொடி மரச்சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் வாலாஜா முனையில், அண்ணாசாலை - பல்லவன் சாலை - பெரியார் சிலை - அண்ணாத்துரை சிலை நோக்கி திருப்பிவிடப்படும்

l ஈ.வெ.ரா., சிலையிலிருந்து வாலாஜா முனை வரை, வெளியே செல்லும் வாகனங்கள் ஒரு திசையில், இருபுறமும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us