ADDED : ஜூன் 19, 2026 02:54 AM
சென்னை: வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலையில், சென்னை மாநகராட்சி சார்பில் நடந்து வரும் மேம்பால பணி காரணமாக, 21ம் தேதி முதல் கணேசபுரம் சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளதாக, காவல் துறை அறிவித்து உள்ளது.
அதன் விபரம்:
*கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
* கொடுங்கையூர் மற்றும் வியாசர்பாடியிலிருந்து கணேசபுரம், புளியந்தோப்பு மற்றும் பட்டாளம் நோக்கி வரும் வாகனங்கள், டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலை - கணேசபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப வேண்டும்.
பின் ஸ்டீபன்சன் சாலை - ஏ.ஏ., சாலை - பெரம்பூர் நெடுஞ்சாலை - முரசொலி மாறன் பாலம் - ஜமாலியா வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
மேலும், கணேசபுரம் பிரதான சாலை - சுந்தரம் நகர் பிரதான சாலை - வியாசர்பாடி ரயில்வே சுரங்கபாதை - பி.பி., டாப் வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
