தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாந்தோமில் போக்குவரத்து மாற்றம்

சாந்தோமில் போக்குவரத்து மாற்றம்

சாந்தோமில் போக்குவரத்து மாற்றம்


ADDED : மார் 08, 2024 12:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை - காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில், கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலைய கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை முதல் ஒரு வார காலத்திற்கு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

 காந்தி சிலையில் இருந்து, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும், கலங்கரை விளக்கம் சந்திப்பில் இடதுபுறம், லுாப் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள், கட்டாயம் இடதுபுறம் திரும்பி, கலங்கரை விளக்கம் வழியாக செல்லலாம்.

காரணீஸ்வரர் கோவில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி, வாகனங்கள் செல்ல அனுமதியில்லை

 லுாப் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒருவழிப் பாதையாக செயல்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us