sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

/

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்


ADDED : மார் 22, 2025 12:16 AM

Google News

ADDED : மார் 22, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், மார்ச், 23, 28, ஏப், 5, 11, 25, 30, மே,12 ஆகிய நாட்களில் போட்டிகளுக்கு முன் மாலை, 5:00 மணி முதல் இரவு, 11 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.

* விக்டோரியா விடுதி சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை

* பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலைக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை

* ரத்னா கபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும்.

வாகன நிறுத்த வசதி


* வாகன நிறுத்ததிற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், அதில் குறிப்பிடப்பட்டு இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்

* அனுமதி அட்டை இல்லாத வாகன ஓட்டிகள், கதீட்ரல் சாலை மற்றும் ஆர்.கே.,சாலை வழியாக காமராஜர் சாலை சென்று, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்

* போட்டியை காண கால் டாக்சி, ஆட்டோ போன்ற வணிக வாகனத்தில் வருவோர், அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலைக்குள் சென்று, மைதானம் அருகே இறக்கிவிட்டு, வாகனங்களை சிவானந்தா சாலையில் நிறுத்தலாம்

* வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதி கிடையாது. அவ்வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்லவும், இறக்கிவிடவும் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக மைதானத்திற்கு அடையலாம்

* பொதுமக்கள் மாடி ரயில், மெட்ரோ ரயில் வாயிலாக மைதானத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக, காவல் துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us