sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சொந்த ஊருக்கு சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

/

சொந்த ஊருக்கு சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

சொந்த ஊருக்கு சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்

சொந்த ஊருக்கு சிரமமின்றி செல்ல தீபாவளியை ஒட்டி போக்குவரத்து மாற்றம்


ADDED : அக் 16, 2025 03:12 AM

Google News

ADDED : அக் 16, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்லவும், தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை மதியம் முதல் நாளை மறுநாள் வரை  சென்னை மற்றும் ஆவடியில் இருந்து வரும் கனரக வாகனங்கள், பூந்தமல்லியில் திரும்பி, ஸ்ரீபெரும்புதுார் - திருவண்ணாமலை - திருக்கோவிலுார் வழியாக ஜி.எஸ்.டி., சாலையில் சென்று, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்

 மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள், மதுரவாயலில் திரும்பி, ஸ்ரீபெரும்புதுார் - காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - திருக்கோவிலுார் வழியாக, ஜி.எஸ்.டி., சாலையை அடைந்து செல்லலாம்

 காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், ஒரகடம் சந்திப்பில் திரும்பி, ஸ்ரீபெரும்புதுார் - திருவண்ணாமலை - திருக்கோவிலுார் வழியாக ஜி.எஸ்.டி., சாலையை அடைந்து செல்லலாம்

அக்., 21 முதல் 22 வரை  செங்கல்பட்டு வழியாக வரும் வாகனங்கள், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் சென்று வாலாஜாபாத் - காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதுார் வழியாக, பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம்

 சிங்கபெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஒரகடம் - ஸ்ரீபெரும்புதுார் வழியாக திரும்பி, பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம்

 இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கனரக வாகனங்கள், வண்டலுார் வெளிவட்ட சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்படும்

 அக்., 21, 22ல் விடுமுறை முடிந்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுப்படுத்த, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியர் அந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்

 புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு செல்வோர், நெரிசலற்ற பயணத்திற்காக, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., வழித்தடங்களுக்கு செல்வதற்கும், திரும்புவதற்கும் பயன்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us