/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரம்பூர் கணேசபுரத்தில் போக்குவரத்து மாற்றம்
/
பெரம்பூர் கணேசபுரத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : நவ 13, 2024 02:34 AM
சென்னை:பெரம்பூர் கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், இன்று முதல், 2025 மே 11ம் தேதி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
l ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
l மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படும். மேலும், அவ்வழியாக செல்ல இருந்த வாகனங்கள், ஏ.ஏ., சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, குக்ஸ் சாலை சந்திப்பு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலை வழியாக புளியந்தோப்பு அடையலாம்
l கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கி செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி ரவுண்டானா, பேசின்பாலம், வியாசர்பாடி புதிய பாலம், மார்க்கெட், முத்து தெரு, மூர்த்திங்கர் தெரு வலதுபுறமாக திரும்பி, எருக்கஞ்சேரி சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.