தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருமங்கலம், கே.கே.நகரில் போக்குவரத்து மாற்றம்

 திருமங்கலம், கே.கே.நகரில் போக்குவரத்து மாற்றம்

 திருமங்கலம், கே.கே.நகரில் போக்குவரத்து மாற்றம்


ADDED : ஜூலை 12, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மெட்ரோ ரயில் மேம்பால பாதை பணிக்காக திருமங்கலம் 100 அடி சாலையிலும், மழைநீர் வடிகால் பணிக்காக கே.கே.நகர் பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

மெட்ரோ ரயில் பாதை கட்டுமான பணிக்காக, திருமங்கலம் 100 அடி சாலையின் இடதுபுற அணுகு சாலையில், நாளை முதல் அடுத்த ஆண்டு ஜூலை 12 வரை போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இடதுபுற அணுகு சாலையில் வாகன போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது.

மாற்றுப்பாதை அம்பத்துார் நோக்கி செல்லும் வாகனங்கள், 18வது பிரதான சாலை அல்லது ஆறாவது அவென்யூ வழியாக, 13வது பிரதான சாலை, இரண்டாவது அவென்யூ மற்றும் 100 அடி அணுகு சாலை வழியாக அம்பத்துார் எஸ்டேட் சாலையை அடையலாம்.

கோயம்பேடு வழி பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் திருமங்கலம் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி நடக்கவுள்ளதால், வரும் 13 முதல் நவ., 10 வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப் படுகிறது.

அதனால், ஜீவானந்தம் சாலையில் வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பி.டி.ராஜன் சாலை நோக்கியும், அண்ணா பிரதான சாலை வழியாக ஜீவானந்தம் சாலைக்கு செல்லவும் அனுமதி இல்லை.

கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா பிரதான சாலையில் இருந்து அசோக் பில்லர் சந்திப்பு வழியாக ஜவஹர்லால் நேரு சாலையில் இடதுபுறம் திரும்பி, தங்களது இலக்கை அடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us