ADDED : ஜூன் 18, 2026 03:24 AM

யானைகவுனி: யானைகவுனி சாலையில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பகுதியில் வரும் 20ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றப்படுவதாக, காவல் துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சூளை ரவுண் டானாவில் இருந்து பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் புளியந்தோப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், ஹஜ் பில்டிங் சந்திப்பில் டெமிலோஸ் சாலை வழியாக பெரம்பூரைச் செ ன்றடைய திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள், யானைகவுனி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளன
பேசின்பாலம் பகுதியில் இருந்து சூளை ரவுண்டானா மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, யானைகவுனி சாலை ஒருவழிப்பாதையாக செயல்படும்
சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சூளை ரவுண்டானாவில் இருந்து பேசின் பாலம் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், யானைக்கவுனி புதிய மேம்பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை, மூலக்கொத்தளம் செல்லலாம்
பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் புளியந்தோ ப்பு ஆகிய பகுதிகளில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள், வழக்கம்போல் புளியந்தோப்பு நெடுஞ் சாலை மற்றும் டெமிலோஸ் சாலை வழியாக செல்லலாம்.
200 அடி சாலை மாற்றம் வில்லிவாக்கம், தாதாங்குப்பம் முதல் ராஜமங்கலம் சந்திப்பு வரையிலான, 200 அடி சாலையில் 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக வேலை நேரங்களில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்கும் வகையில், சோதனை அடிப்படையில், 20ம் தேதி முதல், இப்பகுதியில் போக்கு வரத்து மாற்றப்பட உள்ளது; புதிதாக 'யு - டர்ன்' பகுதி அமைக்கப்பட்டு உள்ளது
தாதாங்குப்பம் தெற்கு ரயில்வே சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி, பழைய டி.ஆர்.ஜே., மருத்துவமனை அருகில் யு -- டர்ன் பகுதியை பயன்படுத்தி, தங்களது இலக்கை அடையலாம்
வாட்டர் கெனால் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, பழைய டி.ஆர்.ஜே., மருத் துவமனை அருகில் யு - - டர்ன் பகுதியை பயன்படுத்தி, செல்ல வேண்டிய இடத்தி ற்கு பயணிக்கலாம்
செந் தில் நகர் சந்திப்பு மற்றும் விவேகானந்தா நகர் பிரதான சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, ராஜ மங்கலம் கருப்பட்டி காபி அருகில் யு -- டர்ன் திருப்பத்தை பயன்படுத்தி செல்லலாம்
செந்தில் நகர், மூன்றாவது பி ரதா ன சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, ப ழைய டி.ஆ ர். ஜே., மருத்துவமனை அருகில் உள்ள யு - டர்ன் பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்
தாதாங்குப்பம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் யு - டர்னை பயன் படுத்திக் கொள்ளலாம் என, காவல் துறை தெரிவித்துள்ளது.
