/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொன்னுார் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
/
கொன்னுார் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : மார் 27, 2025 11:41 PM
சென்னை, மெட்ரோ ரயில் பாதை பணி மேற்கொள்ளப்பட உள்ள கொன்னுார் நெடுஞ்சாலையில், 30ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
காவல் துறை செய்திக்குறிப்பு:
* ஐ.சி.எப்., அயனாவரம் வழியாக புளியந்தோப்பு, சென்ட்ரல், பாரிமுனை செல்லும் அனைத்து வாகனங்களும், கொன்னுார் நெடுஞ்சாலையில் இடதுபுறம் திரும்பி, குளக்கரை சாலை - கிருஷ்ண தாஸ் சாலை - கூக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* சென்ட்ரல், பாரிமுனை, சூளை ரவுண்டானா மற்றும் புளியந்தோப்பு வழியாக ஐ.சி.எப்., அயனாவரம் செல்லும் அனைத்து வாகனங்களும், கொன்னுார் நெடுஞ்சாலையை பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை.
வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

