/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜிவ் காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்!
/
ராஜிவ் காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்!
UPDATED : ஜூலை 31, 2025 07:04 AM
ADDED : ஜூலை 31, 2025 12:33 AM
சென்னை: மத்திய கைலாஷ் - டைடல் பார்க் சந்திப்பு வரையிலான ராஜிவ் காந்தி சாலையில், மேம்பால கட்டுமான பணிக்காக, சாலையின் அகலம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காலை நேரத்தில் அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. நெரிசலை குறைக்கும் விதமாக, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள போக்குவரத்து பாதைக்கு கூடுதலாக, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து, டைடல் பூங்கா நோக்கி செல்லும் வாகனங்கள், எதிர்பாதையின் ஒரு பகுதி போக்குவரத்திற்காக ஒதுக்கப்படுகிறது. ஆக., 1 முதல் இம்முறை செயல்படுத்தப்படும் என, சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

