/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலாஜா - காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
/
வாலாஜா - காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
வாலாஜா - காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
வாலாஜா - காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 03, 2025 02:30 AM
சென்னை:சென்னை வாலாஜா சாலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், அண்ணாதுரை நினைவு நாள் மவுன ஊர்வலம் நடக்க இருப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா துரை நினைவு நாளையொட்டி, இன்று காலை 8:00 மணியளவில், சென்னை வாலாஜா சாலையில் இருந்து காமராஜர் சாலையில் உள்ள, அவரின் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடக்க உள்ளது.
இதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தி.மு.க., உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள், காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல், கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
அதேபோல, கலங்கரை விளக்கத்தில் இருந்து, காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து, வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வாலாஜா சாலை மற்றும் பெல்சாலை, வாலாஜா சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சிக்னலில் திருப்பப்பட்டு அண்ணாதுரை சிலை வழியாக செல்லலாம்.
மவுன ஊர்வலம், வாலாஜா சாலையில் செல்லும் போது, அண்ணா துரை சிலையில் இருந்து ஈ.வெ.ரா., சிலை நோக்கி வாகனங்கள் செல்ல திருப்பி விடப்படும்.
இதனால் காலை நேரத்தில், அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.