/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துரைசாமி சுரங்கப்பாதையில் கசியும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசல்
/
துரைசாமி சுரங்கப்பாதையில் கசியும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசல்
துரைசாமி சுரங்கப்பாதையில் கசியும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசல்
துரைசாமி சுரங்கப்பாதையில் கசியும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 03, 2025 01:48 AM

தி.நகர்: தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிந்து, அதன் மையப்பகுதியில் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேற்கு மாம்பலம் மற்றும் தி.நகரை இணைக்கும் பகுதியாக துரைசாமி சுரங்கப்பாதை உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
தி.நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகர பேருந்துகள், இந்த சுரங்கப்பாதை வழியாகத்தான் சென்று வருகின்றன.
சமீபத்தில் பெய்த மழைக்குபின், சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் கழிவுநீர் தேங்கி வருகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், மேற்கு மாம்பலம் முதல் தி.நகர் செல்லும் பாதையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.