/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுார் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
/
சோழிங்கநல்லுார் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
ADDED : நவ 06, 2024 12:18 AM

சோழிங்கநல்லுார்,
சோழிங்கநல்லுார் சந்திப்பில், மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, சிக்னல் அருகில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் இடிக்கப்பட்டது.
ஏற்கனவே, மேடவாக்கத்தில் இருந்து சிறுசேரி மற்றும் இ.சி.ஆரில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி செல்ல, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இ.சி.ஆரில் இருந்து ஓ.எம்.ஆர்., வழியாக இதர பகுதிகளுக்கு செல்லும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இ.சி.ஆரில் இருந்து கே.கே.சாலை வழியாக, மேடவாக்கம், துரைப்பாக்கம் நோக்கி செல்பவர்கள், சிக்னல் அருகில் ஒரு வழிப்பாதை வழியாக செல்கின்றனர்.
இந்நிலையில், இதன் அருகில் உள்ள கே.கே.சாலை இணைப்பு சாலை வழியாக, வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
அதேபோல், கே.கே.சாலை வழியாக, நாவலுார் நோக்கி செல்பவர்கள், பகிங்ஹாம் கால்வாய் பாலம் முடிந்ததும், இடதுபுறம் திரும்பி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிரதான சாலை வழியாக, 2 கி.மீ., துாரம் பயணித்து, ஓ.எம்.ஆர்., சென்று செல்ல வேண்டும்.
இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.