/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு இந்திரா நகரில் போக்குவரத்து மாற்றம்
/
அடையாறு இந்திரா நகரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 18, 2024 12:02 AM
சென்னை, மெட்ரோ ரயில் பாதை பணிக்காக அடையாறு இந்திரா நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஓ.எம்.ஆர்., நோக்கிச் செல்லும் வாகனங்கள்:
எம்.ஜி.,சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர், 2வது அவென்யூ வழியாக ஓ.எம்.ஆர்., நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, 2வது அவென்யூ, 3வது பிரதான சாலை, 21வது குறுக்கு தெரு, இந்திரா நகர், 3வது அவென்யூ வழியாக செல்லலாம்.
கலாஷேத்ராவிலிருந்து, ஓ.எம்.ஆர்., நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
கே.பி.என்., சாலையில் இருந்து, ஓ.எம்.ஆர்., நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம்போல் செல்லலாம்.
எல்.பி., சாலை நோக்கி செல்லும் வாகனங்கள்:
கலாஷேத்ராவிலிருந்து, இந்திரா நகர், 3வது அவென்யூ வழியாக எல்.பி., சாலை நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர், 4வது அவென்யூ, 3வது பிரதான சாலை, இந்திரா நகர், 2வது அவென்யூ வழியாக செல்லலாம்.
கே.பி.என்., நோக்கிச் செல்லும் வாகனங்கள்:
ஓ.எம்.ஆர்., மற்றும் கலாஷேத்ராவிலிருந்து, கே.பி.என்., சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.