/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லுாப் சாலையில் போக்குவரத்து பிரச்னை இனியும் தொடரக்கூடாது
/
லுாப் சாலையில் போக்குவரத்து பிரச்னை இனியும் தொடரக்கூடாது
லுாப் சாலையில் போக்குவரத்து பிரச்னை இனியும் தொடரக்கூடாது
லுாப் சாலையில் போக்குவரத்து பிரச்னை இனியும் தொடரக்கூடாது
ADDED : பிப் 18, 2025 12:20 AM
சென்னை,மெரினா கடற்கரை, லுாப் சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எடுத்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் அருண்பாபு ஆகியோர் ஆஜராகி, மாநகராட்சி 9வது மண்டல உதவி கமிஷனர் முருகதாஸின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதில், லுாப் சாலையில் உள்ள மீன் வியாரிபாரிகளுக்கு கட்டப்பட்ட மீன் கடை கட்டடம், கடந்தாண்டு ஆக., 12ல் திறக்கப்பட்டு விட்டது. மீன் வியாபாரிகளுக்கு 'டோக்கன்' கொடுக்கப்பட்டு, 356 கடைகளும் ஒதுக்கப்பட்டு விட்டது' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், 'மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில், இன்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. கடற்கரையில் இருந்து சாந்தோம் செல்ல தடையில்லாமல் இருக்க வேண்டும். அதற்கான நட வடிக்கையை மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்' எனக்கூறி, தாமாக எடுத்த வழக்கை முடித்து வைத்தனர்.

