/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து அறிக்கை வெளியிட்டது 'கும்டா'
/
போக்குவரத்து அறிக்கை வெளியிட்டது 'கும்டா'
ADDED : டிச 16, 2025 04:31 AM
சென்னை:நகர், ஊரமைப்பு சட்ட ப்படி, சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த, 2010ல் போக்குவரத்து குழுமமான, 'கும்டா' துவங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை பெருநகர் பகுதியா ன, 1,189 சதுர கி.மீ., பரப்பளவுக்கு முழுமை திட்டத்தை, சி.எம்.டி.ஏ., தயாரித்து வருகிறது. ஆனால், 5,904 சதுர கி.மீ., பரப்பளவுக்கு விரிவான போக்குவரத்து அறிக்கையை, கும்டா தயாரித்துள்ளது.
இதில், சென்னை பெருநகரில், 2048 வரையிலான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த, செப்., 22ல் இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்தது.
அதிகாரிகள் நிலையில் இருந்த இந்த அறிக்கை தற்போது, பொதுமக்கள் பார்வைக்காக, கும்டா இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை, www.cumta.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

