ADDED : அக் 08, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், பல்லாவரத்தைச் சேர்ந்த, ஜூஸ் வியாபாரியான பாஸ்கர், 58, என்பவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே வசிக்கும் 14 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி, தனியாக ஓரிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பல்லாவரம் மகளிர் போலீசார், பாஸ்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.