தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில் இன்ஜின் பழுது பயணியர் பரிதவிப்பு

ரயில் இன்ஜின் பழுது பயணியர் பரிதவிப்பு

ரயில் இன்ஜின் பழுது பயணியர் பரிதவிப்பு


UPDATED : மே 06, 2026 11:21 PM

ADDED : மே 06, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 11:21 PM ADDED : மே 06, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: இன்ஜின் பழுதால் பிருந்தாவன் விரைவு ரயில், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பயணியர் தவிப்புக்கு ஆளாகினர்.

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி, பிருந்தாவன் விரைவு ரயில், காலை 7:40 மணிக்கு புறப்பட்டது. திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு - மோசூர் ரயில் நிலையம் இடையே, 8:25 மணிக்கு வந்தபோது, திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

அரக்கோணம் ரயில்வே ஊழியர்கள் வந்து, இன்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்தனர். பின், 9:45 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணியர் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிப்பட்டனர்.

மேலும், சிக்னலை கடந்து விரைவு ரயில் நின்றதால், ஒன்றாவது மற்றும் இரண்டாவது தண்டவாளம் வழியாக, சென்னை - அரக்கோணம் வரை இயக்கப்படும் நான்கு புறநகர் ரயில்கள் தாமதமாக சென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us