sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மக்கர் ஆன 'எஸ்கலேட்டர்' ரயில் பயணியர் தவிப்பு

/

 மக்கர் ஆன 'எஸ்கலேட்டர்' ரயில் பயணியர் தவிப்பு

 மக்கர் ஆன 'எஸ்கலேட்டர்' ரயில் பயணியர் தவிப்பு

 மக்கர் ஆன 'எஸ்கலேட்டர்' ரயில் பயணியர் தவிப்பு


ADDED : பிப் 23, 2026 05:37 AM

Google News

ADDED : பிப் 23, 2026 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: கிழக்கு தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில், பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டு இயங்காததால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலை, கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த நுழைவாயில் வழியாக ரயில் - பேருந்து நிலையங்களுக்கு செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வந்தனர்.

இந்த நிலையில், நகரும் படிக்கட்டுகள் திடீரென பழுதானது. இதனால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, ரயிவ்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.

எனவே, பழுதடைந்த நகரும் படிக்கட்டுகளை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us