/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி
/
சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி
ADDED : ஜன 15, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனாம்பேட்டை:சென்னை விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. நேற்று, தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியாங்கி சிக்னலில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனால் 10:30 மணிக்கு, ஆங்காங்கே மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணியர் பெரிதும் அவதியடைந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பின், சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, ரயில் சேவை சீரானது.