sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எண்ணுார் - அத்திப்பட்டு இடையே ரயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு

/

எண்ணுார் - அத்திப்பட்டு இடையே ரயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு

எண்ணுார் - அத்திப்பட்டு இடையே ரயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு

எண்ணுார் - அத்திப்பட்டு இடையே ரயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு


ADDED : டிச 21, 2024 12:26 AM

Google News

ADDED : டிச 21, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், மின்சார புறநகர் ரயில்கள், வடமாநிலங்களுக்கு சென்று வரும் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் என, தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில் போக்குவரத்து உள்ளது.

இந்த தடத்தில், எண்ணுார் - அத்திப்பட்டு புதுநகர் இடையே, நேற்று காலை 7:50 மணிக்கு, திடீரென ரயில்வே உயர் அழுத்த மின் பாதையில் இருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

மின்சாரம் தடைபட்டதால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்ல வேண்டிய புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

உடனடியாக, ரயில்வே மின் பாதை பராமரிப்பு துறையினர் வந்து அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று மணி நேரத்திற்கு பின், அறுந்த மின் ஒயர்கள் இணைக்கப்பட்டு, காலை, 10:50 மணிக்கு மின்பாதை சீரானது. இதையடுத்து, ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன.

'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், மூன்று மணிநேரம் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பணிகளுக்கு செல்வோர், வியாபாரிகள், கல்லுாரி மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாயினர்.

திருப்பதி - சென்னை சென்ட்ரல் 'சப்தகிரி' ரயிலின் ஓட்டுனர் யுகேந்திரனுக்கு, நேற்று முன்தினம் இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, திருவள்ளூரில் ரயில் நிறுத்தப்பட்டது.

பயணியர் மாற்று ரயிலில் சென்னைக்கு சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து, மாற்று ஓட்டுனர் கலையரசன், சப்தகிரி விரைவு ரயிலை சென்னைக்கு ஓட்டிச் சென்றார்.






      Dinamalar
      Follow us