ADDED : ஏப் 29, 2026 02:46 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை கடற்கரை தண்டவாளத்தை ஒட்டியுள்ள புற்கள், தீ பிடித்து எரிந்ததால், மின்சார ரயில் சேவை, 20 நிமிடம் பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், ரயில்வே பணிமனை உள்ளது. இங்கு தண்டவாளத்தை ஒட்டியுள்ள காய்ந்த புற்களில், நேற்று மாலை 4:30 மணிக்கு, திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.
தீ மளமளவென 30 மீட்டருக்கு பரவியது. இதையறிந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள், தீயை அணைத்தனர். இதனால் கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தீயால், கடற்கரை - தாம்பரம் இரு வழித்தடங்களில், 20 நிமிடங்களுக்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
