ADDED : பிப் 06, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமங்கலம்,
சோமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், யானைக்கால் நோய் வீக்க மேலாண்மை சிகிச்சை செயல்முறை பயிற்சி, நேற்று அளிக்கப்பட்டது.
இதில், 23 நோயாளிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு நோயாளிக்கும், வீக்க குறைப்பு செய்முறை பயிற்சியும், இரண்டாம் நிலை தொற்று ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய எளிய பயிற்சியும் அளிக்கப்பட்டு, மேலாண்மை சிகிச்சை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதன் முடிவில், யானைக்கால் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும், அனைத்து காய்கறிகள் கொண்ட பை மற்றும் உணவு வழங்கப்பட்டது.