ADDED : ஏப் 06, 2025 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, இன்று முதல் 11ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஈக்காட்டுதாங்கல், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடக்கிறது.
இதில், தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களை தரம் பிரிப்பது, தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, ஆசிட் பயன்படுத்துதல், போலி நகை அடையாளம் காணுதல் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.
அதோடு, நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அரசு மானியங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். பங்கேற்போருக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் தகவலுக்கு, www.editn.in என்ற வலைதள பக்கம், 95668 49767, 98421 11561 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.