/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடமாறுதலில் வந்த அதிகாரி துாக்கிட்டு தற்கொலை
/
இடமாறுதலில் வந்த அதிகாரி துாக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 08, 2024 12:16 AM
பாடி, கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் வள்ளிவேல், 59; மின்சார வாரிய செயற்பொறியாளர். இவரது மனைவி அனிதா, 50. தம்பதியின் மகள் இந்துமதி. இவருக்கு திருமணமாகி, ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் வசிக்கிறார்.
கடந்த மாதம் 9ம் தேதி, சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு, வள்ளிவேலுக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மனைவி அனிதாவுடன் சென்னை வந்த வள்ளிவேல், மகள் இந்துமதி வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன், பாடி, கோல்டன் காலனி 5வது தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து குடிபெயர்ந்தார்.
'பெஞ்சல்' புயல் மழையின்போது இருவரும் மகள் இந்துமதி வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை, பாடியிலுள்ள வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற வள்ளிவேல், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மொபைல் போனையும் எடுக்காமல் இருந்துள்ளார்.
சந்தேகமடைந்த மனைவி அனிதா, அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. கொரட்டூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனைக்கு அனுப்பினர். பணி மாறுதல் வழங்கப்பட்டதால் வள்ளிவேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.