/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலி துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பிடித்து பாதிப்பு
/
மணலி துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பிடித்து பாதிப்பு
மணலி துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பிடித்து பாதிப்பு
மணலி துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பிடித்து பாதிப்பு
ADDED : டிச 15, 2025 05:04 AM

சென்னை: மணலியில், 400/ 230 கிலோ வாட் திறனுடைய துணை மின் நிலையம் உள்ளது. வட சென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒரு பகுதி, இந்த துணை மின் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5:02 மணிக்கு, மணலி 400 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் உள்ள, 315 மெகா வாட் ஆம்பியர் திறனுடைய பவர் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த மணலி, மாதவரம் உள்ளிட்ட நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
மேலும், மின் மாற்றியில் இருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதால், வட சென்னையின் சில பகுதிகளில் நேற்று காலை மின்தடை ஏற்பட்டது.
பின், மணலி துணை மின் நிலையத்திற்கு வந்த, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தீ விபத்து குறித்து ஆய்வு செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணன், ''மாற்று மின்மாற்றி வாயிலாக, மின்தடை ஏற்பட்ட பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது,'' என்றார்.

