ADDED : ஆக 18, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்: பெருங்குடி, எம்.ஜி.ஆர்., சாலையில் உள்ள மின்மாற்றி, நேற்று மாலை திடீரென வெடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால், பெருங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. துரைப்பாக்கம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். சீரான மின் வினியோகம் செல்லாததால், மின்மாற்றி தீ பிடித்து எரிந்தது எனக் கூறப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள், வேறு மின்மாற்றி அமைத்து மின் வினியோகத்தை சீராக்கினர்.
