தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்மாற்றி வெடித்து தீ அரும்பாக்கத்தில் மின் தடை

மின்மாற்றி வெடித்து தீ அரும்பாக்கத்தில் மின் தடை

மின்மாற்றி வெடித்து தீ அரும்பாக்கத்தில் மின் தடை


ADDED : அக் 17, 2025 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரும்பாக்கம்: அரும்பாக்கம் குடியிருப்பு பகுதியில், உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி வெடித்ததால், இரவு முழுதும் மின் தடையால் மக்கள் அவதியடைந்தனர்.

அரும்பாக்கம், வள்ளுவர் சாலையில் உள்ள ஏராளமான குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, இச்சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி, திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது; அருகில் இருந்த மின் பகிர்மான இணைப்பு பெட்டியும் தீப்பிடித்து எரிந்தது.

மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்ததால், அப்பகுதி முழுதும் இருளானது.

கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதனால், வள்ளுவர் சாலை மட்டுமின்றி, ஜெகன்நாதன் நகர் முதல் தெரு, காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை வரை மின்தடை ஏற்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி வெடித்ததாக தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us