/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறந்தவெளியில் கழிவை எரிக்கும் மின்மாற்றி தயாரிப்பு நிறுவனம்
/
திறந்தவெளியில் கழிவை எரிக்கும் மின்மாற்றி தயாரிப்பு நிறுவனம்
திறந்தவெளியில் கழிவை எரிக்கும் மின்மாற்றி தயாரிப்பு நிறுவனம்
திறந்தவெளியில் கழிவை எரிக்கும் மின்மாற்றி தயாரிப்பு நிறுவனம்
ADDED : மே 16, 2025 11:59 PM

பெருங்குடி, பெருங்குடி மண்டலம், வார்டு 182க்கு உட்பட்டது கந்தன்சாவடி. இங்கு, ராஜிவ்காந்தி சாலையை ஒட்டி, ஆண்ட்ரூ யூல் எனும் இந்திய மின்மாற்றி உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் பிளாஸ்டிக் கழிவை அகற்றாமல், நிறுவன வளாகத்திலேயே சேகரித்து, பின் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
குறிப்பிட்ட நிறுவனம், பிளாஸ்டிக் கழிவை திறந்தவெளியில் கொட்டி எரிப்பதால், நிறுவனத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புவாசிகள் சுவாச பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
தவிர, கழிவுநீரையும் முறையாக வெளியேற்றாமல், வளாகத்தில் புதர் சூழ்ந்துள்ள காலி இடத்தில் பகுதியில் தேக்கி வைத்துள்ளனர்.
இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிறுவன கழிவு பொருட்களை முறையாக அகற்ற வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.