தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போக்குவரத்து ஊழியர்கள் வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து ஊழியர்கள் வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து ஊழியர்கள் வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஏப் 08, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, 'போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தில், கட்டணம் செலுத்தி வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்' என, கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, பல்லவன் போக்குவரத்து கழக கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் வெளியிட்ட அறிவிப்பு:

சங்க உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கீழ்வலம் கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ள மனைத்திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் தேவைக்கேற்ப 600 சதுர அடி 2.07 லட்சம் ரூபாய் முதல் 2,400 சதுர அடி 8.28 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கும் மனைக்குரிய தொகையை உடனடியாக செலுத்தி, வரும் 20ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

ஒன்பது சதவீதம் முத்திரை கட்டண விலக்கு அளிக்கப்படும். மனைக்குரிய தொகையை காசோலையாகவோ அல்லது டிடி வரைவோலை வாயிலாகவோ செலுத்தலாம். ரொக்கமாக பணம் வாங்கப்படாது. மேலும் விபரங்களுக்கு 044 - 2536 0144 என்ற எண்ணை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us