தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பயணியர் பேட்டி

பயணியர் பேட்டி

பயணியர் பேட்டி


ADDED : பிப் 02, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி செல்வதற்காக கிளாம்பாக்கம் வந்தேன். நெடுங்குன்றத்திலிருந்து வண்டலுார் வரை பேருந்தில் வந்து, வண்டலுாரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு, மற்றொரு பேருந்து மூலம் வந்தேன். பேருந்து நிலையத்தில் இறங்கி, உடைமைகளை எடுத்துச்செல்வதற்கு, மிகவும் சிரமமாக உள்ளது.

எஸ்.ரத்தினம், 54,

நெடுங்குன்றம்.

.............

கோவையில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில், கிளாம்பாக்கம் வந்தோம். இங்கு, வேளச்சேரி செல்லும் பேருந்துக்காக காத்திருக்கிறோம். மாநகர பேருந்து நிலைய நடைமேடைகளில், பயணியரின் வசதிக்காக, டீக்கடைகள், உணவகங்கள், குடிநீர் பாட்டில், பல் தேய்ப்பதற்கு பேஸ்ட், தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் இல்லாதது சிரமமாக உள்ளது.

எம்.அமுதா, 52,

வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us