/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரம் முறிந்து விழுந்து 2 ஆட்டோக்கள் சேதம்
/
மரம் முறிந்து விழுந்து 2 ஆட்டோக்கள் சேதம்
ADDED : ஏப் 15, 2025 12:37 AM

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகிமை ராஜ், 30; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று காலை 10:45 மணியளவில், அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலை வழியாக மந்தைவெளி நோக்கி, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையோரம் நின்றிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், விபத்து ஏதும் நிகழ்ந்துவிட்டதா என பார்ப்பதற்காக ஆட்டோவை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்திலேயே, அவரது ஆட்டோ மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
அதே பகுதியில், சவாரி ஏற்றிக் கொண்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராஜ்குமார், 36, என்பவரின் ஆட்டோவிலும் அந்த மரத்தின் மற்றொரு கிளை விழுந்து சேதம் அடைந்தது.
தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர்கள் காயங்களின்றி தப்பினர். அபிராமபுரம் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.