/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கே.கே., நகரில் வேரோடு சரிந்த மரம்
/
கே.கே., நகரில் வேரோடு சரிந்த மரம்
ADDED : செப் 16, 2025 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.கே.நகர்;கே.கே., நகர் 80 அடி சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால், சாலையோரம் நின்ற மரம் சரிந்து விழுந்தது.
கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, கே.கே., நகர் 80 அடி சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால், சாலையோரம் நின்ற பெரிய மரம், நேற்று திடீரென சாலை நடுவே சரிந்து விழுந்தது.
இதனால், அச்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றினர்.