ADDED : டிச 05, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,சென்னை, ஆவடி வீராபுரம் பகுதியில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை செயல்படுகிறது. அதன் வளாகத்தில் இருந்த, ஒன்பது வகையான, 20 மரங்கள் மிக்ஜாம் புயல் வீசியபோது விழுந்தன.
இம்மரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு, வரும், 7 ம் தேதி, காலை, 10:00 மணியளவில், ஏலக்கழு உறுப்பினர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கு பெற விரும்புவோர், நுழைவு கட்டணமாக, 500 ரூபாய் செலுத்தி, உரிய படிவங்களை சமர்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு, இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட்டின், 97907 90002 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.