/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குமணன்சாவடி சாலையில் குப்பை அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
/
குமணன்சாவடி சாலையில் குப்பை அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
குமணன்சாவடி சாலையில் குப்பை அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
குமணன்சாவடி சாலையில் குப்பை அரசுக்கு தீர்ப்பாயம் 'நோட்டீஸ்'
ADDED : ஜன 22, 2025 12:32 AM
சென்னை, பூந்தமல்லி நகராட்சி மற்றும் காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை பூந்தமல்லி - குமணன்சாவடி நெடுஞ்சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியே செல்வோர் அவதிக்கு உள்ளாகின்றனர்.
குப்பையில் உள்ள உணவுப் பொருட்களை தேடி வரும் நாய், பன்றி, மாடு உள்ளிட்டவை, சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர் என, கடந்த 8ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'பூந்தமல்லி - குமணன்சாவடி நெடுஞ்சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவது குறித்து, தமிழக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் செயலர்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்.,27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.