/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கல் ஓடை பராமரிப்பு அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
/
வீராங்கல் ஓடை பராமரிப்பு அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
வீராங்கல் ஓடை பராமரிப்பு அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
வீராங்கல் ஓடை பராமரிப்பு அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
ADDED : டிச 04, 2024 11:58 PM
சென்னை,
சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவற்றின் பராமரிப்பு குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநகராட்சிக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
------------------வேளச்சேரி பாலாஜி நகர் அருகே, தடுப்புச்சுவர் இல்லாத வீராங்கல் ஓடையில் குப்பை கொட்டப்படுகிறது.
இதனால், அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில், நீரோட்டம் பாதிப்பதால், ஓடையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல் ஓடை ஆகிய நீர் நிலைகள், பராமரிப்புக்காக சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
வேளச்சேரி பகுதியில் உள்ள வீராங்கல் ஓடையில் குப்பை கொட்டப்படுவதால், மழை நீர் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல் ஓடை ஆகியவற்றை, முறைப்படி சென்னை மாநகராட்சி பராமரிக்க வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 7ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.