/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருச்சி விமானம் தாமதம் பயணியர் அவதி
/
திருச்சி விமானம் தாமதம் பயணியர் அவதி
ADDED : ஆக 29, 2025 12:25 AM
சென்னை :சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணியர் அவதிப்பட்டனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வழக்கமாக மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.50 மணிக்கு திருச்சி சென்றடையும். நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து திருச்சி செல்லும், விமானத்தில் செல்ல 148 பேர் சோதனையை முடித்து காத்திருந்தனர்.
விமானம் தாமதமாக புறப்படும் என, விமான நிறுவனம் திடீரென அறிவித்தது. இரவு 9:00 மணி கடந்தும் விமானம் வருவதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. இதையடுத்து விமான நிறுவன ஊழியர்களுடன் பயணியர் வாக்குவாதம் செய்தனர்.
பின் விமானம் இரவு 10.20 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு திருச்சி சென்றடைந்தது.
இந்த தாமதத்தால் திருச்சியில் இருந்து சென்னைக்கு இரவு 9:20 மணிக்கு வர வேண்டிய விமானம், நள்ளிரவு 12:40 மணிக்கு சென்னை வந்தது.
இரவு தாமதமாக வந்ததால் பயணியர் மெட்ரோ ரயில், மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.