ADDED : மார் 12, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், வி.ஜி.பி., பிரபு நகர் அருகே, குப்பை மேட்டில் உணவு கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இவற்றை உண்ண வரும் தெரு நாய்கள் சண்டையிடுவதால், ஊளையிடுவதாலும் பகுதி மக்களின் உறக்கம் கெடுகிறது.
தவிர, இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை துரத்திச் சென்று கடிப்பதும் அதிகரித்து வருகிறது.
இதனால், சுற்று வட்டார மக்கள், மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குடியிருப்போர் நலச் சங்கம்,
வி.ஜி.பி., பிரபு நகர், பெரும்பாக்கம்.

