/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார திருட்டை தடுத்ததால் இருளில் மூழ்கிய த.வெ.க., கூட்டம்
/
மின்சார திருட்டை தடுத்ததால் இருளில் மூழ்கிய த.வெ.க., கூட்டம்
மின்சார திருட்டை தடுத்ததால் இருளில் மூழ்கிய த.வெ.க., கூட்டம்
மின்சார திருட்டை தடுத்ததால் இருளில் மூழ்கிய த.வெ.க., கூட்டம்
ADDED : ஜூன் 20, 2025 11:59 PM

கோவிலம்பாக்கம்,கோவிலம்பாக்கத்தில், அரசு உயர்நிலைப் பள்ளியின் எதிரே, ஒரு பக்க சாலையை மறித்து, த.வெ.க., தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாலை அக்கட்சியினர் சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவிற்கு தேவையான மின்சாரத்தை, போலீஸ் பூத் அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்து திருடியுள்ளனர். தகவலறிந்த மின் ஊழியர்கள் இணைப்பை துண்டித்தனர்.
இது குறித்து எஸ்.கொளத்துார் மின் வாரிய அதிகாரி கூறுகையில், 'விழா துவங்கும் முன், 'ஜெனரேட்டர்' பயன்படுத்துமாறு அறிவுறுத்தினோம். ஆனால், ஜெனரேட்டரை பயன்படுத்தாமல், திருட்டு மின்சாரத்தில் விழா நடப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, மின் திருட்டு இணைப்பை துண்டித்தோம்' என்றார்.
இணைப்பை துண்டித்ததால், இரவு 7:00 மணிக்கு இருள் மூழ்கியது. பின், ஜெனரேட்டர் வந்தவுடன் 7:35 மணிக்கு விழா மீண்டும் துவங்கியது.
இதேபோல், அனைத்து கட்சி கூட்டங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.