/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் கவிழ்ந்த லாரி கோயம்பேடில் நெரிசல்
/
சாலையில் கவிழ்ந்த லாரி கோயம்பேடில் நெரிசல்
ADDED : ஆக 09, 2025 12:34 AM

கோயம்பேடு, கோயம்பேடு அருகே, சாலையில் கவிழ்ந்த சிமென்ட் கலவை லாரியால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சேத்துப்பட்டில் கட்டுமான பணியிடத்திற்கு சென்ற சிமென்ட் கலவை லாரி, நேற்று காலை 6:00 மணியளவில், வானகரத்தில் உள்ள கிடங்கை நோக்கி, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.
வாகனத்தை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், 34, என்பவர் ஓட்டினார். கோயம்பேடு, ரயில் நகர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் சக்திவேல், லேசான காயங்களுடன் தப்பினார்.
சாலையின் நடுவே லாரி கவிழ்ந்ததால், கோயம்பேடு, அரும்பாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு போலீசார், இரண்டு 'கிரேன்' வாகனங்கள் உதவியுடன், லாரியை அப்புறப்படுத்தினர்.