/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்
/
கால்வாயில் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்
ADDED : நவ 07, 2024 12:16 AM

சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் மண்டலம், 194, 197, 198, 199 ஆகிய வார்டுகளில் இருந்து, பகிங்ஹாம் கால்வாய் செல்லும் வகையில், சாலைகள் உள்ளன.
இந்த சாலை வழியாக, சில வாகனங்கள் சட்டவிரோதமாக சென்று, பகிங்ஹாம் கால்வாய் மற்றும் கரை பகுதியில் கழிவுநீர், கட்டட கழிவுகள் மற்றும் மரக்கழிவுகள் கொட்டுகின்றன.
இந்நிலையில் நேற்று, கட்டடம் மற்றும் மரக்கழிவுகளை ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி, அதை பகிங்ஹாம் கால்வாய் கரையில் கொட்டியது.
இதை பார்த்த, மாநகராட்சி ரோந்து பணி ஊழியர்கள், லாரியை மடக்கி மண்டல அலுவலகத்திற்கு ஓட்டிச் சென்றனர்.
விசாரணையில், மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருந்து கழிவுகளை ஏற்றி, இங்கு வந்து கொட்டுவது தெரிந்தது.
லாரியை உடனே விடுவிக்கமாட்டோம்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.