ADDED : மார் 30, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
கோயம்பேடு:உரிய அனுமதியின்றி மண் ஏற்றி வந்த இரு லாரிகளை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன், கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் முன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதி இல்லாமல், 3 யூனிட் சாதாரண மண்ணை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை, உதவி புவியியலாளர் மடக்கி பிடித்தார்.
லாரி ஓட்டுநர்கள் தப்பியோடிய நிலையில், இரு லாரிகளையும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
