/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்
/
ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்
ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்
ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்
ADDED : டிச 31, 2024 12:31 AM
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, சுனாமி நகரில், 6,700 வீடுகள் உள்ளன. இந்த பகுதி, செம்மஞ்சேரி கால்வாயை ஒட்டி உள்ளதால், வெள்ள பாதிப்பு ஏற்படும். இதை தடுக்க, 45 கோடி ரூபாயில் வடிகால் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.
இதற்காக பள்ளம் தோண்டும்போது, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் மற்றும் தெருவிளக்கு கேபிள்கள் சேதமடைந்தன.
இந்த பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இதன் கேபிள்கள், பல தெருக்களில் சேதமடைந்தன.
அதை, வடிகால் கட்டிய நிறுவனம் சீரமைத்து கொடுக்காததால், 30க்கும் மேற்பட்ட தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இதர தெருக்களிலும், பல கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை. சுனாமி நகர் முழுதும் இருளில் மூழ்கியதால், வழிப்பறி, திருட்டு அச்சத்தில் உள்ளனர்.
அசம்பாவிதம் நடைபெறும் முன், அனைத்து விளக்குகளும் எரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கூறினர்.