ADDED : டிச 31, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், யு-டியூபர் டி.டி.எப்.,வாசன் சில தினங்களுக்கு முன், 'பைத்தான்' எனும் அரியவகை பாம்பை கையில் வைத்து, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள, 'ஷூப்பிலிஸ்ட்' எனும் செல்லப்பிராணி விற்பனையகத்திற்கு கூண்டு வாங்க வந்துள்ளார்.
தகவல் அறிந்து, வேளச்சேரி வனக்காப்பாளர் மனுஷ் மீனா தலைமையிலான வன காவலர்கள் ஐந்து பேர், நேற்று மாலை, திடீரென திருவொற்றியூரில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனையகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ஆப்ரிக்கா கிளி மற்றும் பெங்கால் ஆமை சிக்கியது. அவற்றை, வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.