ADDED : பிப் 10, 2025 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்:அரியவகை கடல் வாழ் உயிரினமான, 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள், கடந்த இரு மாதங்களாக படகுகள், இன்ஜின் மற்றும் வலைகளில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கின. திருவொற்றியூர் - திருச்சினாங்குப்பம் கடற்கரையில் ஒதுங்கிய, 10க்கும் மேற்பட்ட ஆமைகள் அகற்றப்படாமலே விட்டு விட்டனர்.
இறந்த ஆமைகளை, காகங்கள் கொத்தி தின்றது போக, எலும்பு கூடாக கடற்கரைகளில் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக, கடற்கரைக்கு வரும் மக்கள், கிருமி தொற்று அச்சம் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், கடற்கரை வரும் மக்கள், ஒவ்வாமை, வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.