/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகளால் சுகாதார சீர்கேடு
/
கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகளால் சுகாதார சீர்கேடு
கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகளால் சுகாதார சீர்கேடு
கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகளால் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 14, 2025 05:17 AM

திருவொற்றியூர்: கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆமைகளால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழக கடற்கரைகளில், ஆலிவ் ரிட்லி வகையை சேர்ந்த ஆமைகள், நவ - பிப்., மாதம் வரை, இனபெருக்கத்திற்காக வரும் போது, மீனவர்களின் படகுகள், இஞ்சின்கள், வலைகள் மற்றும் கடல் சீற்றம், பருவநிலை மாற்றம் காரணமாக, இறந்து கரை ஒதுங்குவது வாடிக்கையாக உள்ளது.
அதன்படி, வடசென்னையின் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணுாரின் கடற்கரைகளிலும், ஆலிவ் ரிட்லி வகையிலான ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. ஆமைகள் இறப்பை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்து வருகிறது.
அது ஒருபுறமிருக்க, இறந்து கடற்கரையில் ஒதுங்கும் ஆமைகளால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதை அகற்ற, மாநகராட்சியோ, வேறு துறைகளோ நடவடிக்கை எடுப்பதில்லை.
இதன் காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடற்கரையை பயன்படுத்துவோருக்கு கிருமி தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து, கடற்கரைகளை கண்காணித்து, இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடசென்னை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

