தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'யு டியூப் சேனல்' உருவாக்க பயிற்சி

'யு டியூப் சேனல்' உருவாக்க பயிற்சி

'யு டியூப் சேனல்' உருவாக்க பயிற்சி


ADDED : மார் 03, 2024 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னை மற்றும் வேலுாரில் 'யு டியூப் சேனல்' உருவாக்குதல், அதை பயன்படுத்தி தொழில் முனைவோர் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், வரும் 7 ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலும், வேலுாரில், கலெக்டர் அலுவலக கலந்தாய்வு அரங்கில், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.

தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை வகுப்புகள் நடக்கும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, www.editn.in இணையதளத்தை பார்வையிடவும்.

மேலும், 86681 02600, 86681 00181, 70101 43022, 98413 36033 ஆகிய எண்களை, அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us