/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மைதானத்தை மீட்க த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
மைதானத்தை மீட்க த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 01, 2025 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு:திருவேற்காடு, கோலடியில் பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கு பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக, சில அரசியல் கட்சியினரும் திட்டத்தை மாற்று இடத்தில் நிறைவேற்ற, அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வகையில், திருவேற்காடு நகராட்சி அலுவலகம் அருகே த.வெ.க., சார்பில், பகுதிவாசிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர், திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.